அமைச்சராக இருந்தபோது ரூ.100 கோடி ஊழல்.., ரோஜா மீது எழுந்த புகார்
போட்டி நடத்தியதில் ரூ.100 கோடி ஊழல் செய்ததாக நடிகையும், முன்னாள் அமைச்சருமான ரோஜா மீது புகார் வந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
ரோஜா மீது புகார்
முன்னதாக, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்துவதற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஊழல் நடந்திருப்பதாக அப்போது இருந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்திருப்பதாக, கடந்த ஜூன் 11 -ம் திகதி மாநில அரசுக்கு விளையாட்டு அமைப்பு ஒன்றின் தலைவர் பிரசாத் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின்படி விசாரணை செய்வதற்கு விஜயவாடா பொலிஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதாவது, விளையாட்டு கருவிகள் வாங்கியது, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியது உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தீவிரமாக ஆலோசனை நடத்துவதற்கு உத்தரவிட்டிருப்பதாக பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதனால், வழக்கு குறித்து விசாரணை செய்வதற்கு நடிகை ரோஜா அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |