ஹெர்ம்ஸ் உட்பட 100+ டிசைனர் கைப்பைகள் அபேஸ்! £10,000 வெகுமதி அறிவிப்பு!
பிரீமியர் லீக் நட்சத்திரங்கள் வசிக்கும் செஷயரில்(Cheshire) உள்ள ஆல்டர்லி எட்ஜ் (Alderley Edge) கிராமத்தில், பிரத்யேக ஹெர்ம்ஸ்(Hermès) டிசைனர் கைப்பைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆடம்பர கைப்பைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் குற்றவாளிகளை பிடிக்க உதவும் தகவல்களுக்கு £10,000 வெகுமதி அறிவித்துள்ளார்.
செஷயர் பொலிஸ் அதிரடி விசாரணை
"தி ரியல் ஹவுஸ்வைவ்ஸ் ஆஃப் செஷயர்”(The Real Housewives of Cheshire) பிரபலங்களால் அறியப்படும் மாக்லெஸ்ஃபீல்ட் சாலையில் உள்ள ஆடம்பர வில்லாவில் இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
செஷயர் காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். திங்களன்று சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தாலும், கொள்ளை ஒரு வாரத்திற்கு முன்பே நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஹெர்ம்ஸ் பிரத்யேக கைப்பைகள் & ஆடம்பர நகைகள் கொள்ளை
திருடப்பட்ட பொருட்களில் அரிய, தனித்துவமான ஹெர்ம்ஸ் கைப்பைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகள், தங்க கைக்கடிகாரங்கள் அடங்கும்.
பிப்ரவரி 17 அன்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை, அடையாளம் தெரியாத நபர்கள் ஏணியைப் பயன்படுத்தி கூரையின் ஸ்கைலைட் வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அவர்கள் மாக்லெஸ்ஃபீல்ட் சாலை(Macclesfield Road) வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.
£10,000 வெகுமதி அறிவிப்பு
பாதிக்கப்பட்டவரின் காப்பீட்டு நிறுவனம் மூலம் இந்த மிகப்பெரிய வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக செஷயர் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |