பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 100 டொலர் பரிசு! வெளியான அதிரடி அறிவிப்பு
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 100 டொலர் பரிசு வழங்கப்படும் என்று நியூயார்க் மேயர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron கோர தாண்டவம் ஆடி வருகின்றது. டெல்டா வைரஸை விட மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலானோர் 2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தினால் மட்டுமே Omicron வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்று பல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Get boosted? Get 100 bucks.
— Mayor Bill de Blasio (@NYCMayor) December 21, 2021
Starting TODAY we’re offering a $100 incentive to anyone who gets a #COVID19 booster by December 31.
Learn more at: https://t.co/mLRpc82GN7 pic.twitter.com/geVyGeLSA3
இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பு ஊசி போட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் கொள்ள நியூயார்க் மேயர் Bill de Blasio பரிசுத்தொகையை அறிவித்துள்ளார்.
அந்த வகையில் நியூயார்க் நகரை சேர்ந்த பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டொலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.