கொரோனா எதிரொலி! அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தாக்கத்தால் விமான நிறுவனங்கள் பல ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.
தற்போது கூடுதலாக விமானங்களை இயக்க ஆளில்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதால் பல்வேறு உலக நாடுகள் கட்டுப்பாடுகளை நீக்கி வருகின்றது.
இதனால் தற்போது விமான சேவை அதிகரித்து இருக்கும் நிலையில் விமானங்களை இயக்க பணியாளர் பற்றாக்குறையை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை அன்று வானிலை தொடர்பான இடையூறுகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.
இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரி டேவிட் சீமோர் கூறியது, டிசம்பர் இறுதிக்குள் மேலும் 600 பேரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு மன்னிப்பை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.