குண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்... 100 பேர் படுகொலை! பிரபல மத்திய கிழக்கு நாட்டில் மோசமடையும் நிலைமை
மத்திய கிழக்கு நாடான ஏமனில் நடந்த மோதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Marib நகரில் நடந்த மோதலில் 100 ஹவுத்தி போராளிகள், அரசு ஆதரவு படையினர் கொல்லப்பட்டதாக இராணுவம் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.
முக்கிய நகரான Marib-யில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் குறைந்தது 100 ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகள் மற்றும் அரசு ஆதரவு படையினர் கொல்லப்பட்டனர் என இராணுவம் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு ஏமனில் அரசாங்கத்தின் கடைசி கோட்டையான Marib மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ள ஹவுத்திகளை குறிவைத்து அரபு கூட்டுப்படை தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த 48 மணிநேரத்தில் Marib-யில் அரபு கூட்டுப்படை சுமார் 60 முறை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்திய மோதல்களில் 68 ஹவுத்தி போராளிகள் மற்றும் 32 அரசு ஆதரவு படையினர் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.