உக்ரைனில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள்: அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்
உக்ரைனில் ரஷ்யா சார்பாக சண்டையிட்ட வட கொரிய வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு
உக்ரைனின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படைகளுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கும் வட கொரிய வீரர்கள் "நூற்றுக்கணக்கில்" உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, இந்த மதிப்பீட்டில் லேசான காயங்கள் முதல் உயிரிழப்பு வரையிலான பல்வேறு வகையான காயங்கள் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ராணுவ மோதலில் அனைத்து தரவரிசைகளிலும் உள்ள வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, உக்ரைன் மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறைகளின் கூற்றுப்படி, 10,000 க்கும் மேற்பட்ட வட கொரிய வீரர்கள் ரஷ்யாவின் போர் முயற்சியை வலுப்படுத்த ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
"போரில் கடுமையான பயிற்சி பெறாதவர்கள்" என்று விவரிக்கப்படும் இந்த வீரர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைனின் திடீர் படையெடுப்புக்கு பிறகு தீவிரமான போரை கண்ட குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வட கொரிய வீரர்களின் அனுபவமின்மையே அதிக உயிரிழப்புக்கு காரணம் என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா விடுத்த கடும் எச்சரிக்கை! 4,300 பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
குர்ஸ்க் பகுதியில் நடந்த போரில் வட கொரிய வீரர்கள் ஈடுபட்டதையும், உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டதையும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட் ரைடர் உறுதிப்படுத்தியதையடுத்து இந்த கூற்றுகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனிய இராணுவ உளவுத்துறை குர்க் பிராந்தியத்தில் வட கொரிய படைகளுக்கு "கணிசமான இழப்புகள்" ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்தது 30 வீரர்கள் கொல்லப்பட்டு காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |