15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 100 சதவீத பயன்: தடுப்பூசி தொடர்பில் புதிய தகவல்
பைசர் தடுப்பூசி 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா வைரஸிலிருந்து கடுமையான பாதிப்பைத் தடுப்பதில் 100% பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் பல நாடுகளில் செலுத்தப்பட்டுவரும் பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் முதியவர்களை இலக்காகக் கொண்டுள்ளன.
பிரித்தானியாவில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதுடன், படிப்படியாக மொத்த குடிமக்களுக்கும் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்பட்டது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியானது அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அளிக்க அனுமதிக்கப்பட்டது.
அதற்கும் குறைவான வயதுடையவர்களுக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை, ஆனால் சோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 12ல் இருந்து 15 வயதுடைய சிறார்களில் 2,260 பேர்களுக்கு அளிக்கப்பட்டதில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.
100% பயனுள்ளதாக கண்டறிந்துள்ள நிலையில், சிறார்களுக்கு பைசர் தடுப்பூசியை பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பைசர் நிறுவனம் முன்வைத்துள்ளது.
மட்டுமின்றி உடனடியாக தங்களுக்கு கிடைத்துள்ள தரவுகளை அரசு அனுமதிக்காக சமர்ப்பிக்க இருப்பதாகவும்,
இதனால் அடுத்த கல்வி ஆண்டு துவங்கும் முன்னர் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.