இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீது 100% வரி: டிரம்ப் அதிரடி
இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்கள் மீது 100% வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மருந்து பொருட்கள் மீது 100% வரி
அமெரிக்காவின் பாதுகாப்பை காரணம் காட்டி அலுமினியம், தாமிரம் மற்றும் எஃகு போன்ற உலோகங்கள் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான விதிகளை விதித்துள்ளார்.
இந்த புதிய விதிகள் படி, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் மீது 100% வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜெனரிக் மருந்துகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 50% அதன் வழி பொருட்களுக்கு 25% சுங்கவரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்த புதிய வரி விதிப்பானது விதிக்கப்பட்டு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |