ரஷ்யா ஏவிய 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: 52 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைனிய பாதுகாப்பு அமைப்பு
உக்ரைன் மீது ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்
ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி இரவு முழுவதும் உக்ரைன் மீது தொடர்ச்சியான வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
ஏவப்பட்ட 103 ரஷ்ய ட்ரோன்களில் 52 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. மற்ற 44 ட்ரோன்கள் ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Occupiers launch over 100 drones in attack on Ukraine, damaging homes in Kyiv region
— NEXTA (@nexta_tv) December 22, 2024
Overnight, the Russian army launched 103 drones — air defense systems shot down 52, while another 44 disappeared from radar.
In Brovary, Kyiv region, drone debris struck a residential… pic.twitter.com/OVWbT46ZyB
இந்த தாக்குதல் பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு சேதத்தை ஏற்படுத்தியது.
தலைநகரான கீவ்வின் புறநகரான ப்ரோவரியில்(Brovary), விழுந்த ட்ரோன் குப்பைகள் ஒரு குடியிருப்பு கட்டிடத்தை தாக்கி, கூரை மற்றும் மின் தூக்கியை(elevator shaft) தீயில் எரித்தது.
இந்த தாக்குதல் ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
இதில் மனித உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |