பனிக்கட்டியில் மரம்... நீரூக்கு அடியில் காடு! 100 ஆண்டுகால நிலநடுக்கத்தின் விளைவு
100 ஆண்டு பழமையான நிலநடுக்கம் ஒரு அதிசய காட்டை உருவாக்கியது குறித்து இந்த பதிவில் காணலாம்.
கைண்டி ஏரி
கஜகஸ்தானில் உள்ள கைண்டி ஏரி(Kaindy Lake), சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான சர்வதேச சுற்றுலாத்தலமாக வளர்ந்து வருகிறது.

காரணம் இந்த ஏரி நீரின் நீல பச்சை நிற வண்ணமும், உறைந்துள்ள நீருக்கு மேல் வளரும் மரங்களும் ஆகும்.
கடந்த 1911 ஆம் ஆண்டு இந்த பகுதியில் 8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பள்ளத்தாக்கு மூடப்பட்டு இயற்கையானஅணை உருவாகியது.

அந்த பள்ளத்தாக்கு காலப்போக்கில் மழைநீர் மற்றும் உருகும் பனிப்பாறைகளால் மூடப்பட்டது. அங்கிருந்த காட்டில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ப்ரூஸ் மரங்கள் நீருக்கடியில் மூழ்கின.
பொதுவாக இது போல் மரங்கள் நீரில் மூழ்கினால் அது அழுகிவிடும். ஆனால் இந்த ஏரியில் உள்ள குளிர்ந்த நீர் மரத்தின் அடிப்பகுதிகளைப் பாதுகாக்க உதவுகிறது.

இந்த மரத்தின் தண்டுகள் குச்சியாக உறைந்துள்ள நீருக்கு மேல் வளர்ந்து காணப்படுகிறது. ஆனால் இதில் உள்ள இலை மற்றும் கிளைகள் உதிர்ந்து, குச்சி போன்று சிறியது.
400 மீட்டர் நீளமுள்ள இந்த ஏரியில், சுமார் 30 மீட்டர் ஆழமுடையது. இந்த மரங்களின் வேர்கள் நீருக்கு அடியில் 30 மீட்டருக்கு நீண்டுள்ளது.
நிலச்சரிவின் போது வந்த சுண்ணாம்பு கல் போன்ற தாதுக்கள், சூரிய ஒளியை சிதறடித்து நீரின் மேற்பரப்பை நீல பச்சை வண்ணத்தில் வைத்துள்ளது.

இந்த ஏரி கோடைகாலத்தில் கூட அரிதாக 6 டிகிரி வரை வெப்பமடையும். குளிர்காலத்தில் முற்றிலும் உறைந்து விடும்.
தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்திருந்தாலும், இதில் நீச்சல் செய்ய பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |