ட்ரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டம்: ஒரே நாளில் 1000 கார்டுகள் விற்பனை
ட்ரம்ப்பின் புதிய கோல்டு கார்டு விசா ஒரே நாளில் 5 பில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்த Gold Card விசா திட்டம் பெரும் கவனம் பெற்றுள்ளது.
5 மில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த கோல்டு கார்டு விசா அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வாய்ப்பு வழங்குகிறது.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லூட்நிக், பிப்ரவரி 25-ஆம் திகதி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் ஒரே நாளில் 1,000 கோல்டு கார்டுகள் விற்பனை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதற்கான மென்பொருளை எலோன் மஸ்கின் குழு உருவாக்கி வருகிறது என்றும், இரண்டு வாரங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கோல்டு கார்டின் அம்சங்கள்
- ஒவ்வொரு கார்டும் $5 மில்லியன்
- அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கும்
- அமெரிக்க குடியுரிமை விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம்
- முந்தைய EB-5 முதலீட்டு விசா திட்டத்திற்கு மாற்று
- வருமான வரி சலுகை வழங்கும் (அமெரிக்காவிற்கு வெளியே சம்பாதித்த வருமானத்திற்கு வரிவிலக்கு)
EB-5 விசா திட்டத்துடன் வேறுபாடு
1990-இல் உருவாக்கப்பட்ட EB-5 விசா திட்டம் மூலம் வெளிநாட்டவர்கள் $1 மில்லியன் (அல்லது குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் $800,000) முதலீடு செய்தால் அமெரிக்காவில் பணி வாய்ப்புகள் உருவாக்கி கிரீன் கார்டு பெற முடியும். 2024-ஆம் ஆண்டில் 4,500 EB-5 விசாக்கள் வழங்கப்பட்டன.
இந்தியர்கள்?
டொனால்டு ட்ரம்ப், கோல்டு கார்டு திட்டத்தால் ஒரு மில்லியன் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டால் 5 டிரில்லியன் டொலர் வருவாய் வரும் என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால், இந்திய முதலீட்டாளர்கள் இதற்கு பதிலாக வேறு நாட்டின் குடியுரிமை திட்டங்களை ஆராயக்கூடும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய திட்டம் இந்திய முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்காது என நிபுணர்கள் கருதுகின்றனர். Ajmera Law Group-ன் குடிவரவு சட்ட ஆலோசகர் பிரசாந்த் அஜ்மேரா, இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமைக்கு குறைவாக முன்வருவார்கள் என கூறியுள்ளார்.
மேலும், EB-5 விசா நீக்கப்பட்டால், இந்திய முதலீட்டாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம், கனடா, போர்ச்சுகல், கிரீஸ் போன்ற நாடுகளின் குடியுரிமை திட்டங்களை தேர்வு செய்யக்கூடும் என XIPHIAS Immigration நிறுவனர் வருண் சிங் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |