பிரித்தானியாவில் ஏப்ரல் 2025 முதல் அமுலுக்கு வரும் புதிய வேலைசார் சட்டங்கள்
ஏப்ரல் 2025 முதல், பிரித்தானியாவில் (UK) பல்வேறு வேலைசார் சட்ட மாற்றங்கள் அமுலுக்கு வருகிறது.
இதில் ஊதிய உயர்வு, மகப்பேறு மற்றும் நோயாளி சம்பள உயர்வு, மற்றும் நியோனேட்டல் விடுப்பு (neonatal leave) உள்ளிட்ட முக்கிய வேலை உரிமைகள் இடம்பெற்றுள்ளன.
3.5 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
ஏப்ரல் மாதம் முதல், தேசிய வாழ்வாதார ஊதியம் (National Living Wage) மற்றும் குறைந்தபட்ச தேசிய ஊதியம் (National Minimum Wage) உயர்த்தப்படுகிறது.
தேசிய வாழ்வாதார ஊதியம் £11.44 இலிருந்து £12.21-ஆக உயரும். இது ஒரு முழு நேர ஊழியருக்கு வருடத்திற்கு கூடுதலாக £1,400 வரை வருமானம் சேர்க்கும்.
18-20 வயதுக்குள் உள்ளவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் £8.60-லிருந்து £10.00-ஆக அதிகரிக்கும்.
இளைய தொழிலாளர்களுக்கான மாணவர் ஊதியம் (apprentice) £6.40-லிருந்து £7.55-ஆக உயருகிறது.
maternity pay, parental leave pay மற்றும் sick pay உயர்வு
- Maternity pay £184.03-லிருந்து £187.18-ஆக அதிகரிக்கிறது.
- Sick pay £116.75-லிருந்து £118.7 -ஆக அதிகரிக்கிறது.
- Parental leave pay £187.18-ஆக உயர்கின்றன.
Neonatal leave
ஏப்ரல் 6 முதல், (premature) குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு புதிய நியோனேட்டல் விடுப்பு (neonatal leave) வழங்கப்படும்.
பெற்றோர் ஒரு வாரத்திற்கு ஒரு வாரம் அடிப்படையில், அதிகபட்சம் 12 வாரங்கள் சம்பளத்துடன் விடுப்பு பெறலாம். இது maternity மற்றும் paternity leave-க்கு பிறகு கூடுதலாக வழங்கப்படும்.
National Insurance உயர்வு
- உரிமையாளர்கள் (Employers) வழங்கும் National Insurance 1.2% அதிகரித்து 15% ஆகும்.
- குறைந்தபட்ச வருமான அளவுக் கட்டணம் £9,100 -லிருந்து £5,000-ஆக குறைக்கப்படுகிறது.
- சிறிய நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு தள்ளுபடி (Employment Allowance) £5,000-லிருந்து £10,500-ஆக அதிகரிக்கப்படுகிறது.
இந்த வேலைசார் சட்ட மாற்றங்கள், தொழிலாளர்களுக்கு அதிகமான வருமான பாதுகாப்பு மற்றும் வேலை உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |