தாலிபான்களுக்கு ஆதரவாக குவிந்த மக்கள் கூட்டம்! எதற்கு தெரியுமா?
தாலிபான்கள் மீண்டும் ஆட்சி அமைத்தததை கொண்டாடும் விதத்தில் நடந்த பேரணியில் பயங்கரவாதிகளை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெண்கள் அவர்களின் தனிப்பட்ட உரிமைக்காக போராடி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் பலர் தாலிபான்களுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் காபூல் நகரில் மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் கோடாமன் நகரில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதை கொண்டாடும் விதமாக தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து மிக பெரிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்று இருக்கிறது.
அதில் தாலிபான்களை ஆதரிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். கூட்டங்கள் இருபுறமும் தாலிபான்கள் கையில் துப்பாக்கி ஏந்தி பாதுகாத்தனர். நடுவில் மக்கள் அமர்ந்து கொண்டு அவர்கள் ஆற்றும் உரையை கேட்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று உயர்நிலை பள்ளிகளில் மீண்டும் சிறுமிகள் படிக்க வேண்டும் என்று பள்ளிகள் முன்னிலையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பெண்கள் நடத்திய போராட்டத்தை தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கலைத்தனர்.