பெண்ணின் பித்தப்பையிலிருந்த 1000 கற்கள்! வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 30 வயது பெண்ணின் பித்தப்பையிலிருந்து சுமார் 1000 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனைபடைத்துள்ளனர்.
புனேவில் வசித்து வந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அவரை பரிசோதித்து பார்த்ததில் பித்தப்பையில் கற்கள் உருவாகியிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்த பின்னர், அவற்றை அகற்ற பரிந்துரைத்தனர்.
குழந்தை பிறக்க சில மாதங்களே உள்ள நிலையில், குழந்தை பெற்றெடுத்த பின்னர் அறுவை சிகிச்சையை நடந்த முடிவு செய்தனர்.
அதன் பின் அந்த பெண்ணுக்கு 20 நிமிட லேப்ராஸ்கோபிக் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிந்தது.
அப்போது பெண்ணின் பித்தப்பையிலிருந்து சுமார் 1000 கற்களை மருத்துவர்கள் அகற்றினார்கள்.
கற்கள் ஒவ்வொன்றும் 1 முதல் 2 mm வரை பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்ததாக தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை செய்த பெண் நலமுடன் இருப்பதாகவும் கூறிய மருத்துவர்கள், அதிகப்படியான கொழுப்பு காரணமாகவும் பித்தப்பையில் கற்கள் சேர வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |