எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயல்... சிக்கிக்கொண்ட 1000 பேர்கள்
திபெத் பகுதி எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கு சரிவில் கிட்டத்தட்ட 1,000 பேர் பனிப்புயலில் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16,000 அடி உயரம்
முகாம்களில் சிக்கியுள்ளவர்களை மீட்க தடையாக இருந்த பனியை அகற்றும் பொருட்டு உதவுவதற்காக நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம மக்களும் மீட்புக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பனிப்புயல் ஏற்பட்டுள்ள பகுதியானது 16,000 அடி உயரம் என்றே கூறுகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் இருந்த சில சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே மலையிலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கிய பனிப்பொழிவு சனிக்கிழமை முழுவதும் நீடித்துள்ளது. இதனையடுத்து சனிக்கிழமை பிற்பகுதியிலிருந்து எவரெஸ்ட் சிகரப் பகுதிக்கான டிக்கெட் விற்பனை மற்றும் நுழைவு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் எல்லைக்கு அப்பால், நேபாளத்தில், வெள்ளிக்கிழமை முதல் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 47 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது பனிப்புயலில் சிக்கியுள்ள 1,000 பேர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் இல்லாத நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |