அமெரிக்காவால் நாடுகடத்தப்பட்ட 104 இந்தியர்கள் நாடு திரும்பினர்: அடுத்து என்ன?
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது.
அவர்கள் அனைவரும் சற்று முன், அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் இந்தியா வந்தடைந்துள்ளார்கள்.
நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், சட்டவிரோத புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஏராளமானோர் நாடுகடத்தப்பட்டுவருகிறார்கள்.
அவ்வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு டெக்சாஸிலுள்ள சான் அண்டோனியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, சற்று முன் அமிர்தசரஸிலுள்ள ஸ்ரீ குரி ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அடுத்து என்ன?
ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் அந்த 104 பேரும், தத்தம் மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள்.
அவரவர் சார்ந்த மாநில அரசுகள், அவர்களை அவரவர் ஊர் கொண்டு சேர்ப்பதற்காக பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |