வகுப்பறையிலேயே 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை! போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில், 10ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவன்
ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி - பிஹ்ரோர் மாவட்டத்தச் சேர்ந்த பள்ளி மாணவர் சச்சின். இவர் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், ஆசிரியர் திட்டியதால் சச்சின் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பறையில் யாரும் இல்லாத சமயம் சச்சின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். மாணவனின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
dailythanthi
தொல்லை கொடுத்த ஆசிரியர்கள்
முதற்கட்ட விசாரணையில், விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய ஆசிரியர்கள் இருவர் சச்சினுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
ஆசிரியர்கள் சச்சினை சாதி ரீதியில் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. சச்சினை தேர்வில் தோல்வியடைய வைத்து வாழ்வை சீரழித்து விடுவதாக அவர்கள் மிரட்டியதுடன், தாக்கியும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாணவனை ஆசிரியர்கள் கொலை செய்துவிட்டதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |