பிரெஞ்சு பிஷப்கள் மீது பாலியல் வன்முறை குற்றசாட்டு: தலைமை தேவாலய அமைப்பு நடவடிக்கை
11 பிரெஞ்சு பிஷப்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வழக்கு அல்லது தேவாலய ஒழுங்கு நடைமுறைகளை எதிர்கொள்வார்கள்.
பிரான்சில் முன்னாள் பிஷப்கள் உட்பட 11 பிரெஞ்சு பிஷப்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று பிரான்சின் கத்தோலிக்க தலைமை தேவாலய அமைப்பு திங்களன்று அறிவித்தது.
35 ஆண்டுகளுக்கு முன்பு மைனர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக ஒப்புக்கொண்ட Bordeaux-ன் முன்னாள் பிஷப்பும் இந்த பட்டியலில் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் அவர்களால் கார்டினல் ஆக்கப்பட்ட போர்டியாக்ஸின் நீண்டகால பிஷப் Jean-Pierre Ricard, 14 வயது சிறாரிடம் தவறாக நடந்துகொண்டதை ஒப்புக்கொண்டார் என்று பிரான்ஸ் பிஷப்கள் மாநாட்டின் தலைவரான Eric de Moulins-Beaufort செய்தியாளர்களிடம் கூறினார்.
AFP - Norbert Grisay / Hans Lucas
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வழக்கு அல்லது தேவாலய ஒழுங்கு நடைமுறைகளை எதிர்கொள்வார்கள் என்று வடகிழக்கு ரீம்ஸின் archbishop டி மௌலின்ஸ்-பியூஃபோர்ட் மேலும் கூறினார்.
தென்மேற்கு பிரான்சில் உள்ள லூர்து நகரில் பிரெஞ்சு ஆயர்கள் தங்கள் இலையுதிர் கால மாநாட்டிற்காக கூடுகின்றனர், அங்கு மதகுருமார்களுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றச் சாட்டுகள் தொடர்பாக அவர்களின் தகவல் தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
1950-களில் இருந்து பாதிரியார்கள், டீக்கன்கள் மற்றும் சர்ச்சின் சாதாரண உறுப்பினர்களால் சிறார்களை பரவலாக துஷ்பிரயோகம் செய்ததை உறுதிப்படுத்திய விசாரணையின் கண்டுபிடிப்புகளால் தேவாலயம் கடந்த ஆண்டு அதிர்ச்சியடைந்தது.
கடந்த 7 தசாப்தங்களில் 216,000 சிறார்களை மதகுருமார்கள் துஷ்பிரயோகம் செய்ததாக தலைமை தேவாலய அமைப்பு கண்டறிந்தது.
அதுமட்டுமின்றி, கத்தோலிக்க பள்ளிகளின் ஆசிரியர்கள் போன்ற தேவாலயத்தின் சாதாரண உறுப்பினர்களுக்கு எதிரான குற்றசாட்டுகளை சேர்க்கப்படும்போது இந்த எண்ணிக்கை 330,000 ஆக உயர்ந்தது.