ஹோர்முஸில் கப்பல் மீதான தாக்குதலில் 11 இந்தியர்கள் காயம்
11 indians injured panama flagged vessel attacked near hormuz: ஹோர்முஸ் நீரிணை அருகே பனாமா கொடி ஏற்றப்பட்ட கப்பல் மீதான தாக்குதலில் 11 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.
கப்பல் மீதான தாக்குதலில் 11 இந்தியர்கள் காயம்
ஈரான் மற்றும் அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தும் , அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகைக்கு இடையே ஹோர்முஸ்நீ ரிணையை சுற்றியுள்ள பகுதிகளில் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், 17 இந்தியர்கள் உட்பட 19 பணியாளர்கள் அடங்கிய பனாமா கொடி ஏற்றப்பட்ட MT On Peace என்ற வர்த்தக கப்பல் ஓமன் அருகே ஹார்மோஸ் நீரிணையை கடந்துள்ளது.

இந்த சூழலில் இந்த கப்பல் மீது நடத்த்ப்பட்ட தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த கப்பல் பணியாளர்கள் ஓமன் அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டு, ஓமானின் கசாப் நகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம்., பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
Statement on the attack on a commercial vessel MT On Peace, off the coast of Oman 🔗 https://t.co/nuE2vv3x8k https://t.co/9KE13wy5UY
— Randhir Jaiswal (@MEAIndia) October 6, 2026
மேலும், சர்வதேச நீர்வழிகள் மூலமான கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் கூடிய விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளது.
மேலும், கப்பல் பணியாளர்களை மீட்டு சிகிச்சை அளித்ததற்காக ஓமனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.