துருக்கியில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் காயம்
Turkish school shooting leaves eight injured: துருக்கியில் பள்ளி ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பேர் காயமடைந்துள்ளார்கள்.
துருக்கியின் Turgutlu மாவட்டத்திலுள்ள Manisa என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
பள்ளியில் துப்பாக்கிச்சூடு
இன்று காலை 8.00 மணியளவில் பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர் என கருதப்படுகிறது.
எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார் என்பது தெரியாத நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்த ஆண்டில், இப்படி துருக்கி பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.