பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு Omicron பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு Omicron பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவில் இருந்து உருமாறிய மாறுபாடுக்கு உலக சுகாதாரத்துறை Omicron என்று பெயர் சூட்டியுள்ளது.
இந்நிலையில் Omicron வைரஸ் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா போன்ற 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
பாகிஸ்தானில் உள்ள Karachi நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு Omicron பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதோடு மட்டுமின்றி பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் மட்டும் 515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இஸ்லாம்பாத்தில் Omicron மாறுபட்டால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.