11 வயது சிறுமியை திருமணம் செய்தவர் அதிரடியாக கைது!
ஒரு பெண் கொடுத்த கடனை திருப்பி தராததால் அவரது மகளை திருமணம் செய்துக் கொண்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
பீகார் மாநிலத்தில் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திர பாண்டே என்ற ஒரு நபர் தனது கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அந்த பெண் தனது கடனை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருந்ததால், அவருடைய 11 வயதான பெண் பிள்ளையை திருமணம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனது மகளை கட்டாய திருமணம் செய்துக் கொண்டதாக அந்த பெண் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளாளர்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.