பூனை கீறியதால் உயிரிழந்த 11 வயது சிறுமி: கேரளாவில் சோக சம்பவம்
இந்திய மாநிலம் கேரளாவில் 11 வயது சிறுமி பூனை கீறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நகத்தால் கீறிய பூனை
கேரளாவின் பந்தளத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரின் 11 வயது மகள் ஹன்னா. இவர் அதேபகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமி ஹன்னாவின் கழுத்தில் பாடசாலை ஆசிரியர்களை வீக்கத்தைக் கவனித்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக அவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அப்போதுதான் சமீபத்தில் சிறுமியை பூனை ஒன்று நகத்தால் கீறியது தெரிய வந்தது.
உயிரிழப்பு
பூனை கீறியதால் காயமடைந்த சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னரும் வீக்கம் ஏற்பட்டதால் இரண்டாவது முறையாக அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு மீண்டும் தடுப்பூசி போட்ட பின்னர் ஹன்னாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி ஹன்னா கோட்டயம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |