உதவிக்கு அழைத்த 11 வயது சிறுவனை நெஞ்சில் சுட்ட பொலிஸார்: பகீர் சம்பவம்
அவசர உதவிக்கு அழைத்த 11 வயது சிறுவனை பொலிஸ் அதிகாரி ஒருவர் நெஞ்சில் சுட்டு இருப்பது மிசிசிப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பாக வீடு திரும்பிய சிறுவன்
அமெரிக்காவின் இந்தியனோலா பகுதியில் வசிக்கும் அடெரியன் முர்ரி (Aderrien Murry) என்ற 11 வயது சிறுவனை பொலிஸ் அதிகாரிகள் நெஞ்சில் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.
இதனால் சிறுவன் நுரையீரல், கல்லீரல் மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாகவும், 5 நாட்கள் வரை மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர்களது வழக்கறிஞர் கார்லோஸ் மூர் தெரிவித்துள்ளார்.
Courtesy of Carlos Moore
பொலிஸாரை சுட தூண்டும் அளவிற்கு அடெரியன் முர்ரி தவறாக எதுவும் செய்யவில்லை என்றும், அனைத்தும் சரியாகவே செய்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அடெரியன் முர்ரி-யின் குடும்பம் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு உறுதியான நீதியை கேட்கின்றனர் என்றும் வழக்கறிஞர் கார்லோஸ் மூர் தெரிவித்துள்ளார்.
அவசர அழைப்புக்கு அழைத்த சிறுவன்
துப்பாக்கி சூடு நடந்த அன்று அதிகாலை 4 மணிக்கு அடெரியனின் தாயார் நாகலா-வின் முன்னாள் காதலர் வீட்டுக்குள் வந்ததை தொடர்ந்து அவரால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தாய் நாகலா தான் சிறுவன் அடெரியன் முர்ரி-ஐ பொலிஸாருக்கு அழைப்பு விடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையிலேயே அடெரியன் முர்ரி பொலிஸார் மற்றும் அவர்களது பாட்டியை தொடர்பு கொண்டுள்ளார், இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நகாலா கதவை திறப்பதற்கு முன் அதை உடைத்து கொண்டு உள்நுழைந்துள்ளனர்.
represented image(Getty)
அப்போது அவரது முன்னாள் காதலர் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், 3 குழந்தைகள் மட்டுமே தற்போது வீட்டிற்குள் இருப்பதாக நகாலா தெரிவித்துள்ளார், ஆனால் பொலிஸார் வீட்டில் இருப்பவர்கள் கைகளை உயர்த்தி வெளியே வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாரின் அறிவிப்பு படியே அடெரியன் முர்ரி வெளியே வந்த நிலையில், திடீரென பொலிஸார் சிறுவனை சுட்டு வீழ்த்தியுள்ளனர், இத்தனைக்கும் சிறுவன் கையில் எதுவும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.