110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்: பரிசு தொகைக்கு பிரித்தானியர் கோரிக்கை!
£110 யூரோ மில்லியன் ஜாக்பாட் பரிசுக்கான டிக்கெட்டை வைத்து இருப்பதாக பிரித்தானியர் கோரிக்கை.
வெற்றி எண்கள் 07,12,13,20 மற்றும் 45 அத்துடன் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 03 மற்றும் 12 என அறிவிப்பு.
வெள்ளிக்கிழமை நடந்த லாட்டரி டிராவில் பிரித்தானியர் ஒருவர் £110 யூரோ மில்லியன் ஜாக்பாட் பரிசுக்கான டிக்கெட்டை வைத்து இருப்பதாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரித்தானியாவில் லாட்டரி டிக்கெட் வைத்திருப்பவர் வெள்ளிக்கிழமை £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்டை வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sky News
பிரித்தானியாவில் வெற்றி எண்கள் 07,12,13,20 மற்றும் 45 அத்துடன் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 03 மற்றும் 12 ஆகிய எண்களை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளை வைத்திருப்பவர் வெள்ளிக்கிழமை £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்டை வென்றுள்ளார் என கேம்லாட் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் £110 யூரோ மில்லியன் ஜாக்பாட் பரிசுக்கான டிக்கெட்டை வைத்து இருப்பதாக பிரித்தானியர் ஒருவர் கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி நேஷனல் லாட்டரியின் மூத்த வெற்றியாளர்களின் ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் தெரிவித்துள்ள தகவலில், "இது முற்றிலும் நம்பமுடியாத செய்தி, நாங்கள் உரிமைகோரலை பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்துள்ளது.
Sky News
மேலும் "எங்கள் கவனம் இப்போது பயணச்சீட்டு வைத்திருப்பவரை ஆதரிப்பதில் உள்ளது மற்றும் அவர்களின் உண்மையான வாழ்க்கையை மாற்றும் வெற்றியை அனுபவிக்க அவர்களுக்கு உதவுவதில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை பிரித்தானியாவில் 15 வீரர்கள் மட்டுமே £100mக்கும் அதிகமான ஜாக்பாட்டை வென்றுள்ளனர், இதில் ஜூலையில் £195m வென்ற சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sky News
கூடுதல் செய்திகளுக்கு: புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் ”ஒரு முட்டாள்” அமைச்சர் மனைவி ட்விட்டரில் கருத்து!
தற்போதைய £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட் போன்று சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு Gloucestershire பகுதியை சேர்ந்த ஜோ மற்றும் ஜெஸ் த்வைட், மே 10 அன்று நடைபெற்ற டிராவில் இருந்து £184 மில்லியன் வெற்றியை கொண்டாடினர்.