புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் ”ஒரு முட்டாள்” அமைச்சர் மனைவி ட்விட்டரில் கருத்து!
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் ”ஒரு முட்டாள்” பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரின் மனைவி காட்டம்.
தனது வேலையை இழந்ததற்காக ஏமாற்றம் அடைந்ததாக அமைச்சர் ஜானி மெர்சர் கருத்து.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் ”ஒரு முட்டாள்” என பதவி நீக்கம் செய்யப்பட்ட டோரி எம்.பியின் மனைவி ஃபெலிசிட்டி கொர்னேலியஸ்-மெர்சர்(Felicity Cornelius-Mercer) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, நடைபெற்ற தேர்தலில் லிஸ் ட்ரஸ் (Liz Truss) நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Image: Jonathan Buckmaster
இந்த நிலையில் நேற்று பிரித்தானிய மகாராணியை சந்தித்து விட்டு, முதல் முறையாக நாட்டு மக்களுக்கு டவுனிங் தெரு Liz Truss உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தனது தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவைக்காக, தற்போதைய அமைச்சரவையில் பல மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அலுவலகத்தில் லிஸ் ட்ரஸ் தற்போது பணியாற்றி வருகிறார்.
Image: Getty Images
லிஸ் ட்ரஸ் தலைமையிலான புதிய அமைச்சரவையில் பல்வேறு புதிய அமைச்சர்கள் இடம் பெற்று இருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் படைவீரர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஜானி மெர்சர் அவரது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Image: NurPhoto/PA Image
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜானி மெர்சரின் மனைவி ஃபெலிசிட்டி கொர்னேலியஸ்-மெர்சர் ட்விட்டரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸை ”ஒரு முட்டாள்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய பிரதமருக்கும் அமைச்சர் ஜானி மெர்சர் (Johnny Mercer) இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸிடம் ஜானி மெர்சர் என்னை விட இந்த பாத்திரத்தில் யார் சிறந்தவராக இருக்கப் போகிறார்கள், மேலும் உங்களின் கூட்டாளிகளுக்கு ஏதேனும் வாக்கு அளித்துள்ளீர்களா என்று கேட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
He asked her ‘why would you do this, who is going to be better at this role than me, which of your mates gets the job, you promised a meritocracy?’
— Felicity Cornelius-Mercer (@mercer_felicity) September 6, 2022
PM - I can’t answer that Johnny
This system stinks & treats people appallingly
Best person I know sacked by an imbecile @trussliz pic.twitter.com/RZGblGA1tx
அதற்கு பிரதமர், என்னால் இதற்கு பதிலளிக்க முடியாது என்றும், இந்த அமைப்பு துர்நாற்றம் வீசுகிறது மற்றும் மக்களை பயங்கரமாக நடத்துகிறது என்றும் தெரிவித்ததாக ட்விட்டரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரின் மனைவி பதிவிட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மேற்கு நாடுகள் தோல்வியடைகிறது...எரிவாயு விற்பனையில் சீனாவிற்கு புதிய சலுகை: புடின் அறிவிப்பு!
A personal statement.
— Johnny Mercer (@JohnnyMercerUK) September 6, 2022
Time for others to step up. I will be spending time with my family and doing no media requests. pic.twitter.com/8mFgIza9WL
பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஜானி மெர்சர், தனது வேலையை இழந்ததற்காக ஏமாற்றம் அடைந்ததாகவும், ஆனால் லிஸ் ட்ரஸ் தனது ஆதரவாளர்களுக்கு வெகுமதி அளிக்க தகுதியுடையவர், அவரது முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.