37 மாதங்கள் கொண்ட Canara Bank Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
கனரா வங்கியில் 37 மாதங்கள் டெபாசிட் செய்ய கூடிய Green Deposit FD திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Canara Bank Green Deposit FD
ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டங்கள் மற்ற FDகளைப் போலவே உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரிட்டர்ன் திட்டங்களாகும். ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானவை.
பெரும்பாலும் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு நிலையான FDகள் வழங்குவதை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். அதேபோல, FD முடிந்தவுடன் முதிர்வு பெறலாம்.
Canara Bank Green Deposit FD திட்டத்தின் கீழ் கனரா வங்கியானது 1,111 நாட்கள், 2,222 நாட்கள் மற்றும் 3,333 நாட்கள் சிறப்பு FD வழங்குகிறது.
இதில், பொது குடிமக்களுக்கு 1111 நாட்கள் கொண்ட FD -ல் 6.70 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதேபோல, மூத்த குடிமக்களுக்கு 1111 நாட்கள் கொண்ட FD -ல் 7.20 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ரூ.5 லட்சம் முதலீடு
* 1111 நாட்கள் கொண்ட Canara Bank Green FD திட்டத்தில் பொதுகுடிமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.1,12,075.69 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.6,12,075.69 கிடைக்கும்.
* 1111 நாட்கள்கொண்ட Canara Bank Green FD திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.1,21,300.72 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.6,21,300.72 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |