சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 119 பேர்: இரண்டாவது விமானத்தை அனுப்பிய அமெரிக்கா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 119 இந்தியர்கள் விமானம் மூலம் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகள்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையால் மெக்சிகோ, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அந்தந்த நாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த 5ஆம் திகதி இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை முதற்கட்டமாக அமெரிக்கா திருப்பி அனுப்பியது.
இந்த நிலையில் மேலும் 119 சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை விமானத்தில் அமெரிக்கா அனுப்பியுள்ளது.
மூன்றாவது விமானத்தில் 157 பேர்
இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணியளவில் அந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வர உள்ளது.
இதில் பஞ்சாப், அரியானாவைச் சேர்ந்தவர்கள் 100 பேர் என்றும், மீதமுள்ளவர்கள் குஜராத், உத்தர பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சல் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 4 பேர் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது விமானத்தில் 157 பேரை அமெரிக்க அனுப்ப உள்ளதாகவும், அந்த விமானம் நாளை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |