சேவல் சண்டையின் போது துப்பாக்கி சூடு - 12 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்காவின் ஈக்வடார்(ecuador) நாட்டில் உள்ள மனாபி மாகாணத்தில், உள்ள கிராம பகுதியொன்றில் சேவல் சண்டை நடைபெற்றுள்ளது.
சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கி சூடு
இதனை காண, சேவல் சண்டை அரங்கில் மக்கள் கூடியிருந்தனர். இரவு 11.30 மணியளவில் முகமுடி மற்றும் ராணுவ சீருடை அணிந்த மர்ம கும்பல் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது.
இதனையடுத்து, அங்கிருந்த பரிசுத்தொகையை 12,000 டொலர்களை, அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இதனையடுத்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள், அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையில், சம்பவம் நடந்த இடத்தில், தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் போலியான ராணுவ சீருடைகளை கைப்பற்றியுள்ளனர்.
ஈக்வடாரில், 20 க்கும் மேற்பட்ட குற்ற கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. ஈக்வடார் துறைமுகத்தின் வழியாக போதைப்பொருள் கடத்தும் பாதைகளை, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இந்த கும்பல்கள் போட்டியிட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |