தொடர்ந்து 12 நிலநடுக்கங்கள்: நாடொன்றில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
Tsunami alert after twelve earthquakes off coast of Italy sparking mass evacuations: இத்தாலியில் தொடர்ந்து 12 நிலநடுக்கங்கள் தாக்கியதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஏராளமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இத்தாலி நாட்டில், தொடர்ந்து 12 நிலநடுக்கங்கள் தாக்கியதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 12 நிலநடுக்கங்கள்
இத்தாலி நாட்டிலுள்ள சிசிலித் தீவை நேற்று காலை 12.00 மணிக்கு முன்பிருந்தே நிலநடுக்கங்கள் தாக்கத் துவங்கியுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக முதல் நிலநடுக்கம் உருவாக, 12,20 மணியளவில் 5.0 அளவில் ஒரு நிலநடுக்கம் உருவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து 3.0 மற்றும் அதற்கு சற்று அதிக அளவில் நிலநடுக்கங்கள் உருவாகிக்கொண்டே இருந்துள்ளன.
மொத்தம் 12 நிலநடுக்கங்கள் உருவாக, ஆரஞ்சு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தலைநகர் Palermo மற்றும் Messina நகரங்களிலுள்ள பள்ளிகளிலிருந்த மாணவ மாணவியர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டது குறித்து இதுவரை எந்த தகவல்களும் இல்லை.
பொதுவாக, ரிக்டர் அளவில் 6.0 மற்றும் அதற்கு அதிகமாக பதிவாகும் நிலநடுக்கங்கள்தான் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால், 5.0ஆக பதிவான நிலநடுக்கமே இத்தாலி மக்களைப் பதறவைத்ததற்கு காரணம் உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பத்தாண்டுகளில் முதன்முறையாக ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான ஒரு நிலநடுக்கத்தை எதிர்கொண்டது இத்தாலி.
அப்போது ஏற்பட்ட சேதமும், அந்த நேரத்தில் நிலநடுக்கத்தின்போது கேட்ட உறுமல் போன்ற சத்தமும், இத்தாலி மக்களுக்கு ஏற்படுத்திய அச்சம் இன்னமும் தீரவில்லை.