சோமாவதி அமாவாசையில் தீய சக்தியிலிருந்து விடுபட பரிகாரங்கள்...!
அமாவாசையில் ஆடி மாதம் வரும் சோமவதி அமாவாசைதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்துக்களால் கருதப்படுகிறது. ஆடி அமாவாசையில் சிவனை வழிபாடு செய்தால், உங்கள் ஜாதகத்தில் இருக்கும் ராகு தோஷங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் சுப காரியங்கள் செய்ய முடியாது. ராகுதோஷம் இருந்தால் சோமாவதி அமாவாசை அன்று தீய சக்திகளின் ஆற்றல் அதிகமாக இருக்கும். நல்ல காரியங்கள் அவர்களால் செய்ய முடியாது.
சரி வாங்க.. ராகு தோஷத்திலிருந்து விடுபட சோமாவதி ஜோதிடத்தில் வழிபாடு நடத்தும் முறைகள் குறித்து பார்ப்போம் -
1. அமாவாசையன்று ராகு ஸ்தோத்திரம் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் எதிர்மறை விளைவுகள் கட்டுக்குள் வரும்.
2. சோமாவதி அமாவாசையன்று அரச மரத்தடியில் கடுகு எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்.
3. சோமாவதி அமாவாசையன்று அரச மரத்தடியில் கிராம்புகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
4. சோமாவதி அமாவாசையன்று கருப்பு நாய்க்கு ரொட்டி வழங்க வேண்டும். இப்படி செய்வதால் ராகுதோஷம் நீங்கும். செல்வம் செழிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |