ஐரோப்பிய நாடொன்றில் 12 டன் கிட்காட் சாக்லேட் கொள்ளை
நெஸ்ட்லே நிறுவனத்தின் கிட்காட் சாக்லேட் உலகளவில் பிரபலமானது.
தற்போது சுமார் 12 டன் எடையுள்ள கிட்காட் சாக்லேட்கள் திருப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிட்காட் சாக்லேட் கொள்ளை
கடந்த மார்ச் 26 ஆம் திகதி போலந்தில் உள்ள உற்பத்தி நிலையத்தில் இருந்து ஐரோப்பா முழுவதும் விநியோகம் செய்ய 12 டன் எடையுள்ள கிட்காட் சாக்லேட்கள் போலாந்திற்கு லொறியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த லொறி செல்லும் வழியிலே மாயமாகியுள்ளது. சாக்லேட்கள் லொறியுடன் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் நெஸ்ட்லே நிறுவனம் புகாரளித்துள்ளது.
12 டன் எடையுள்ள சாக்லேட்கள் கொள்ளையிடப்பட்டத்தை தனது எக்ஸ் பதிவில் உறுதி செய்துள்ளது.
Regarding recent press coverage pic.twitter.com/Huh4EnFV2J
— KITKAT (@KITKAT) March 29, 2026
மேலும், சாக்லேட் கவரில் அச்சிடப்பட்டுள்ள தனித்துவமான தொகுதி குறியீடுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு தயாரிப்பையும் கண்காணிக்க முடியும்.
திருடப்பட்ட சாக்லேட்கள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதால், நுகர்வோர், சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள், ஒரு பொருள் திருடப்பட்ட சரக்கில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க இந்தக் குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |