பிரித்தானியாவில் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! பாதசாரி மீது மோதியதில் பறிபோன உயிர்
பிரித்தானியாவில் வாடகை E-Scooterயில் பயணித்த சிறுவன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடகை E-Scooter
பர்மிங்காமில் 12 வயது சிறுவனான முஸ்தபா நதீம் E-Scooter ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பாடசாலைக்கு பயணித்துள்ளார். அப்போது பாதசாரி ஒருவர் மீது சிறுவனின் வாகனம் மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் முஸ்தபா, அவ்வழியாக வந்த பேருந்து சக்கரத்தில் சிக்கினார். இதில் உடல் நசுங்கி பரிதாபமாக முஸ்தபா உயிரிழந்தார்.
அப்பட்டமான அதிர்ச்சி மற்றும் மார்பில் நசுக்கப்பட்ட காயங்களின் விளைவாக சிறுவன் இறந்ததாக நீதிமன்றம் தனது விசாரணையில் தெரிவித்துள்ளது.
பாதசாரியிடம் விசாரணை
இதனையடுத்து விபத்தில் தொடர்புடைய பாதசாரி சாமுவேல் பிரவுன் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார். அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், என்ன நடந்தது என்பதைப் பார்க்க திரும்பியபோது 'உலோகம் நொறுங்குவது' போன்ற சத்தம் கேட்டதாகவும், சாலையில் ஒரு நபரைப் பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.
அதேபோல் பேருந்து பயணி ஒருவர் கூறும்போது, சிறுவன் பாதசாரி மீது மோதிவிட்டு சாலையை நோக்கி செல்வதற்கு முன்பு, பஸ்ஸின் அதே வேகத்தில் பயணிப்பதை பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், சிறுவன் முஸ்தபா நடைபாதை வழியாக விரைவாக E-Scooter யில் சென்றுள்ளார். பாதசாரியை முந்தி சென்ற அவர், பின்னர் குறுக்கு வழியில் வலதுபுறமாக வளைந்து செல்வதை பார்த்ததாகவும் மற்றொரு பயணி கூறினார்.
இதுகுறித்து வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையைச் சேர்ந்த துப்பறியும் சார்ஜெண்ட் பால் ஹியூஸ், பேருந்து மற்றும் அருகில் உள்ள வணிகங்கள் இரண்டில் இருந்தும் சிசிடிவி சோக நிகழ்வு பதிவானதாக கூறியுள்ளார். அத்துடன் பேருந்து ஓட்டுநர் தவறு செய்யவில்லை என்றும் கூறினார்.
Andrew Matthews/PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |