'அம்மா நான் திருடவில்லை' - கடிதம் எழுதிவிட்டு 12 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு
இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் 12 வயது சிறுவன் தனது உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 வயது சிறுவன்
பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கிரிஷேந்து தாஸ். 7ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கிரிஷேந்து, கோஸைபர் பஜாரில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் கீழே கிடந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துள்ளார். ஆனால் கடை உரிமையாளர் சிறுவன் அதனை திருடியதாக நினைத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் கூட்டத்தைக் கூட்டிய அவர் சிறுவனை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார்.
இந்த நிகழ்வினால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் வீட்டிற்கு சென்றதும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளார்.
சிகிச்சை பலனின்றி
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் விரைவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பொலிஸார் விசாரணையில் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், "அம்மா நான் திருடன் இல்லை. நான் திருடவில்லை. நான் காத்திருந்தபோது கடைக்காரர் அருகில் இல்லை. திரும்பி வரும்போது சாலையில் கிடந்த ஒரு குர்குரே பொட்டலத்தைக் கண்டேன், அதை எடுத்தேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும். இவை புறப்படுவதற்கு முன் நான் கூறிய வார்த்தைகள். இந்த செயலுக்கு (பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டது) என்னை மன்னியுங்கள்" என எழுதப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |