நொடிப்பொழுதில் செயல்பட்டு சகோதரனை காப்பாற்றிய சிறுமி! பாராட்டுக்கள் குவியும் வீடியோ
அமெரிக்காவில் பாடசாலை ஒன்றில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட சகோதரனை சிறுமி காப்பாற்றிய விடயம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
உணவால் மூச்சுத் திணறல்
அமெரிக்காவின் Massachusetts நகரில் உள்ள பாடசாலையில் பயின்று வரும் இரட்டையர்கள் அமெலியா (12), சார்லி (12). இவர்களில் சார்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு சீஸ் துண்டு சிக்கிக் கொண்டது.
இதனை கவனித்த அவரது சகோதரி அமெலியா விரைந்து வந்து, சார்லியின் மார்பைச் சுற்றிக் கைகளைக் கட்டிக்கொண்டு, சிக்கிய உணவை வெளியேற்ற உதவினார்.
இதனால் மூச்சு திணறலில் இருந்து சார்லி காப்பாற்றப்பட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், சகோதரின் உயிரைக் காப்பாற்றிய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பயந்துபோன சிறுவன்
இதுகுறித்து சிறுவன் சார்லி கூறுகையில், நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன். பயமாக இருந்தது. அடுத்த என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் இருந்தது என தெரிவித்தார்.
அமெலியா கூறும்போது, 'வகுப்பு தோழர்கள் அனைவரும் மிகவும் பயந்தார்கள், அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் அவனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன், அது வெறும் உள்ளுணர்வு. முறையாக பயிற்சி பெறவில்லை என்றாலும் என்ன செய்வது என்று யூகித்தேன்' என தெரிவித்துள்ளார்.
பெருமைப்படும் சிறுமியின் தந்தை
இரட்டையர்களின் தந்தை ஜேசன் லவர்ம் தனது மகளை நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து நம்ப முடியாத அளவிற்கு பெருமைப்படுவதாக கூறினார்.
மேலும், இதுபோன்ற உயிர்காக்கும் விடயங்களைப் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள் என்று நான் கூறுவேன் என குறிப்பிட்டார்.
தனது செயலுக்காக அமெலியா இந்த வாரம் பாடசாலை குழுவில் இருந்து அங்கீகாரம் பெற்றார். அத்துடன் காவல்துறைத் தலைவரிடம் இருந்து விருதையும் பெறுவார் என்று கூறப்படுகிறது.
WBZ Boston