வீட்டில் அணு உலை உருவாக்கி 12 வயது சிறுவன் சாதனை: FBI விசாரணை!
அமெரிக்காவை சேர்ந்த 12 வயது சிறுவனின் தன்னுடைய படுக்கை அறையில் அணு உலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
12 வயது சிறுவனின் சாதனை
அமெரிக்காவின் மெம்பிஸ் என்ற பகுதியை சேர்ந்த ஜாக்சன் ஓஸ்வால்ட் என்ற 12 வயது சிறுவன், தனது படுக்கை அறையில் அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி, FBI-யின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஜாக்சன் அணுக்கரு இணைவு உலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
14 வயதில் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு இணைவை சாதித்த டெய்லர் வில்சனின் TED பேச்சு அவருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
"இவ்வளவு இளம் வயதில் ஒருவர் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்ய முடியும் என்பதைப் பார்த்ததும், என் மனதிற்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. அதனால், 11 வயதில் நானும் அதைச் செய்ய முடிவு செய்தேன்," என்று ஜாக்சன் X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கின்னஸ் சாதனை
ஒரு வருட தீவிர உழைப்பிற்குப் பிறகு, தனது 13-வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு ஜாக்சன் தனது இலக்கை அடைந்துள்ளார்.
"எனது 13-வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு பல கடினமான சோதனைகளுக்குப் பிறகு, நான் வெற்றிகரமாக இணைவை அடைந்து நியூட்ரான்களை ஆதாரமாக கண்டறிந்தேன்," என்று ஜாக்சன் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சாதனை அவருக்கு அணுக்கரு இணைவை சாதித்த இளம் வயதினர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுத் தந்துள்ளது.
அவரது அற்புதமான சாதனையைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஜாக்சனுக்கு கிடைத்துள்ளது.
FBI விசாரணை
அவரது சாதனை சட்ட அமலாக்கத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"எனக்கு சில விரும்பத்தகாத கவனமும் கிடைத்தது. ஒரு சனிக்கிழமை இரண்டு FBI அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து, கைஜர் கவுண்டர் மூலம் வீடு முழுவதும் சோதனை செய்தனர். அதிர்ஷ்டவசமாக, நான் சுதந்திரமாக இருந்தேன்," என்று ஜாக்சன் பகிர்ந்து கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |