பிரித்தானியாவில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி: 12 வயது சிறுவன் கைது
பிரித்தானியாவில் 11 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துமீறிய 12 வயது சிறுவன்
ஹாம்ப்ஷையரின் பிஷப்’ஸ் வால்தம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்ததாக எழுந்த புகாரில் 12 வயது சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8.30 மணிக்கு இந்த துஷ்பிரயோக சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச் செயல் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கைது செய்யப்பட்ட சிறுவன் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு வழங்கி வருவதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் குற்றச்செயல் நடந்த பூங்காவில் இருந்த இளைஞர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |