இரசாயன ஆலையில் 1,200 உக்ரேனிய குடிமக்கள் சிக்கித்தவிப்பு., ரஷ்யா தொடர் தாக்குதல்
ரஷ்யா படையினர் தொடர் தாக்குதல் நடத்திவரும் இரசாயன ஆலையில் 1,200 உக்ரேனிய குடிமக்கள் அடைப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு உக்ரேனிய நகரமான Severodonetsk-ல் உள்ள அசோட் (Azot) இரசாயன ஆலையின் தங்குமிடங்களில் 1,200 பொதுமக்கள் வரை தங்கியிருக்கலாம், அங்கு ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது என்று ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதி ஒருவர் தெரிவித்தார்.
சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் கீழ் நிறுவப்பட்ட இந்த அம்மோனியா தொழிற்சாலையில் இருந்து பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரத்திற்கு மனிதாபிமான பாதையை சீர்குலைக்க உக்ரேனிய படைகள் முயன்றதாக கூறப்படுகிறது.
வீரர்கள், ஆயுதங்களை இழந்து, பழைய டாங்கிகளை தேடும் நிலையில் ரஷ்யா!
மக்கள் வெளியேறும் வழிகளைத் தடுக்கும் வகையில், சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் குறுக்கே உள்ள கடைசிப் பாலம் அழிக்கப்பட்டது. அதற்கான ஆதார காட்சிகளும் இணையத்தில் வெளியாகின.
செவெரோடோனெட்ஸ்கில் சுமார் 1,000 முதல் 1,200 பொதுமக்கள் இன்னும் அசோட் இரசாயன ஆலையின் பிரதேசத்தில் இருக்கலாம் என்று லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் ரஷ்ய ஆதரவு சுய பாணியிலான பிரிவினைவாத நிர்வாகத்தின் அதிகாரி ரோடியன் மிரோஷ்னிக் தெரிவித்தார்.
மிரோஷ்னிக் கூறுகையில், உக்ரேனியப் படைகளால் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ள ஆலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் உள்ளனர், உக்ரேனிய மற்றும் வெளிநாட்டு போராளிகள் உட்பட 2,000 பேர் வரை இருப்பதாக அவர் கூறினார்.
பொதுமக்களை வேண்டுமென்றே அசோட் ஆலைக்குள் அழைத்துச் சென்றதாகவும், அவர்களை உக்ரேனிய போராளிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா கூறியதை உக்ரைன் மறுத்துள்ளது.
எல்லாவற்றையும் தூள் தூளாக தகர்த்தெறிந்த ரஷ்ய படையினர்! வெளியான வீடியோ காட்சி