12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
2021 தேர்தலில் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட இருந்த விவசாயக்கடன் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகையான 12, 110 கோடி ரூபாய் தள்ளுபடி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பயிர் கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரன் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு விவசாய சங்கங்கள் மற்றும், அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.