பிரபல ஐரோப்பிய நாட்டில் இருந்து விமானத்தில் வந்த 125 பேருக்கு கொரோனா! வெளியான முக்கிய தகவல்
பிரபல ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு வந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்கிரான் வைரஸ் பரவலுக்கு பின் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவிழும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்தாலியில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு வந்த ஏர் இந்தியா விமான பயணிகள் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குனர் வி.கே.சேத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தில் மொத்தம் 179 பயணிகள் இருந்ததாகவும் அவர்கள்,அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.