ரயில் நடத்துனர் கழிவறைக்குச் சென்றதால் தாமதமான 125 ரயில்கள்
ரயில் நடத்துனர் ஒருவர் கழிவறைக்குச் சென்று திரும்ப நான்கு நிடங்கள் ஆனதால் 125 ரயில்கள் தாமதமான சம்பவம் ஒன்று தென்கொரியாவில் நடந்துள்ளது.
நடத்துனர் கழிவறைக்குச் சென்றதால் தாமதமான 125 ரயில்கள்
தென்கொரிய தலைநகர் சியோலில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 8.00 மணியளவில் ரயில் சாரதி ஒருவர் அவசரமாக கழிவறைக்குச் சென்றுள்ளார்.
தனது ரயிலை ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு கழிவறைக்கு அவர் செல்ல, கழிவறையோ இரண்டாவது தளத்தில் இருந்துள்ளது.
அவர் கழிவறைக்குச் சென்று திரும்ப 4 நிமிடங்கள் 16 விநாடிகள் ஆகியுள்ளன.
அதற்குள் பின்னால் வந்த ரயில் காத்திருக்க நேரிட, அதைத்தொடர்ந்து அடுத்த ரயில் தாமதமாக, இப்படியே சுமார் 125 ரயில்கள் 20 நிமிடங்கள் வரை தாமதமாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் தாமதமாக புறப்பட்டாலும், பெரும்பாலான பயணிகளை அவர்கள் பயணித்த ரயில்கள் சரியான நேரத்துக்கு அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்ததால், பயணிகள் அவதியுறும் நிலை தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |