இந்திய குடியரசு தின விழா சாகசம் - 1270 கிலோ கோழி இறைச்சிகளை வீசுவது ஏன்?
இந்திய குடியரசு தின விழாவின் விமான படை சாகசத்திற்காக 1270 கிலோ கோழி இறைச்சி வாங்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தின விழா
வரும் ஜனவரி 26 ஆம் திகதி இந்தியாவில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுவார்.

அதைத்தொடர்ந்து, ராணுவ அணிவகுப்பு மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்களின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கலாச்சார நடனங்கள் இடம்பெறும்.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
1270 கிலோ கோழி இறைச்சி
இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு 1270 கிலோ எலும்பில்லாத கோழி இறைச்சிகளை, டெல்லி வனத்துறை டெண்டர் மூலம் வாங்கியுள்ளது.

குடியரசு தின விழாவின் போது இந்திய விமானப்படையின் விமானங்கள் வான் பரப்பில் பறந்து சாகசங்களில் ஈடுபடும்.
இதில் விமானங்கள் தாழ்வாக பறக்கும் போது, அதில் பறவைகள் மோதினால் பெரும் சேதாரம் ஏற்படும்.
இதனை தவிர்க்க, பறவைகளை குறைந்த உயரத்தில் பறக்க வைக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட டெல்லி செங்கோட்டை, டெல்லி கேட் உள்ளிட்ட 12 பகுதிகளில் ஜனவரி 15 ஆம் திகதி தொடங்கி கோழி இறைச்சிகளை குறைந்த உயரத்தில் வீசி பறவைகளை அந்த உயரத்திலே பறக்க வைக்கும் முயற்சியில் வனத்துறை இறங்கியுள்ளது.
இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. ஆனால் வழக்கமாக எருமை இறைச்சி பயன்படுத்தப்படும். இந்த முறையை கோழி இறைச்சியை பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |