விடுதியில் தங்கி படித்த பள்ளி மாணவி மர்ம மரணம்!
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்ம மரணமடைந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வேளாண்குடியை சேர்ந்தவர் ராஜா. இவரது 16 வயது மகள் ஹரிணிகா, திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
குறித்த மாணவி அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் குன்றியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மாணவி ஹரிணிகாவுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள், ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.