2 வயது குழந்தை மீது காரை ஏற்றிய 12ம் வகுப்பு மாணவன்: சிசிடிவியில் கிடைத்த மோசமான நொடிகள்!
இந்தியாவில் 2 வயது குழந்தை மீது 12ம் வகுப்பு மாணவன் கார் ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 வயது சிறுவன் மீது ஏறிய கார்
மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் பகுதியில் 12 வகுப்பு மாணவன் ஒருவர் 2 வயது குழந்தை மீது காரை ஏற்றியது பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கரமான சம்பவத்தில் 2 வயது குழந்தை ரிஷித் திவாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சியில், பாட்டியிடம் இருந்து ஓடி சாலைக்கு வந்த 2 வயது குழந்தை ரிஷித் திவாரி மீது அருகில் வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த கார் மோதியதும், பின் காரின் சக்கரங்களில் குழந்தை சிக்கி கொண்டதையும் பார்க்க முடிகிறது.
வீட்டிற்குள் பாட்டி பூஜை தட்டை வைக்க சென்ற சிறிய இடைவெளியில் குழந்தையானது சாலைக்கு ஓடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன் தனது தந்தை சுரேந்திர பிரதாப்-யின் காரை ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது.
வழக்குப்பதிவு
இந்நிலையில், வாகனம் ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |