நடுவானில் விமானத்தின் மூக்கை உடைத்த பறவை! பீதியில் அலறிய பயணிகள்: வைரல் வீடியோ
பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் பறவை மோதிய எதிர்பாராத விபத்தினால் அவரசமாக புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியுள்ளது.
விமானத்தில் மோதிய பறவை
ஸ்பெயினின் மாட்ரிட் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் நோக்கி பறந்த Iberia Airbus A321-253NY பயணிகள் விமானம் IB579 புறப்பட்ட 20 வது நிமிடத்திலேயே திடீர் பாதிப்பு காரணமாக மீண்டும் மாட்ரிட் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
நடுவானில் ஏற்பட்ட இந்த திடீர் குழப்பத்திற்கு விமானத்தின் மூக்கு பகுதியில் பறவை மோதியதே காரணம் என கூறப்பட்டுள்ளது.
🇪🇸#España
— Radio SUCRE 700 AM (@radio_sucre700) August 4, 2025
Un avión ✈️ de la empresa #española, @Iberia, aterrizó ayer de emergencia en el aeropuerto de #Barajas, luego de sufrir un incidente con un grupo de aves
La aeronave cubría la ruta #Madrid #París 🇫🇷, fue impactado por un pájaro, lo que provocó daños en el aparato… pic.twitter.com/Ki3Xq76yiY
இந்த சம்பவத்தால் விமான பயணிகள் பீதியில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படங்களில் விமானத்தின் மூக்கு பகுதியில் பலத்த சேதமடைந்து இருப்பது பார்க்க முடிகிறது.
மேலும், குழப்பமான சூழ்நிலை குறித்து வீடியோ பதிவு செய்த பயணி ஜியான்கார்லோ சாண்டோவல் தெரிவித்த தகவலில், “ஏதோ காற்றழுத்த தாழ்வு என்று நினைத்தோம் ஆனால் பிறகு நிலைமை மோசமானதை உணர்ந்தோம், சத்தம் கேட்க தொடங்கியதை அடுத்து ஏதோ நடக்க போகிறது என்று உணர்ந்தோம் என தெரிவித்துள்ளார்.
அவர் பதிவு செய்த வீடியோ காட்சிகளில், புகை சூழ்ந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக அனைவரும் ஆக்சிஜன் மாஸ்க்குகளை அணிவதை பார்க்க முடிகிறது.
இறுதியில் விமானிகளின் திறமையால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அனைவரும் நிம்மதியில் கைதட்டி மகிழ்ந்துள்ளனர்.
விமான குழுக்கு பாராட்டு
இந்நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட செயல்பட்ட விமானிகள் மற்றும் கேபின் குழுவை பாராட்டி இபேரியா விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில், விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட பாதிப்பே விமானத்தில் புகை பரவியதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் மீது பறவைகள் மோதுவது சாதாரணமாக நடந்தாலும், 10% மட்டுமே மிகவும் மோசமான சேதத்தை ஏற்படுத்த கூடியது என்று முன்னாள் மரைன் கர்னல் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |