விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் தேர்ச்சி
தமிழக மாவட்டமான திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மற்றும் அமராவதி. இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.
இதில் சுகுமார் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து வந்தார். இந்நிலையில் இந்த மாணவர் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 6-ம் திகதி அன்று சுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது ஆட்டோ மோதி விபத்தில் சிக்கினார்.
பின்னர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்தனர். இருப்பினும் கடந்த 21-ம் திகதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சுகுமார் 443 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |