இரயில் தடம் புரண்டு விபத்து - 13 பேர் உயிரிழப்பு; 98 பேர் காயம்
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டின் ஒக்சாகா மற்றும் வெராகுரூஸ் மாகாணங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் இண்டர்ஓஷெனிக் ரயிலில், 9 பணியாளர்கள் மற்றும் 241 பயணிகள் உட்பட 250 பேர் பயணம் செய்தனர்.
ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழப்பு
ரயில் நிசாண்டா நகருக்கு அருகே ஒரு வளைவில் திரும்பிய போது ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில், தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
98 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தினை தொடர்ந்து, பசுபிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோவை இணைக்கும் ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயில் தடத்தை மெக்சிகோவின் கடற்படை நிர்வகித்து வரும் நிலையில், விபத்து நடந்த இடத்திற்குக் கடற்படை மூத்த அதிகாரிகள் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு, மெக்சிகோ ஜனாதிபதி கிளவ்டியா செயின்பாம் உத்தரவிட்டுள்ளார்.
Me informa la Secretaría de Marina que en el accidente del Tren Interoceánico lamentablemente fallecieron 13 personas; 98 están lesionadas, cinco de ellas de gravedad. Los heridos se encuentran en hospitales del IMSS en Matías Romero y Salina Cruz, así como de IMSS-Bienestar en…
— Claudia Sheinbaum Pardo (@Claudiashein) December 29, 2025
இந்த விபத்துக்கான காரணம் குறித்து, மெக்சிகோவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.
பசிபிக் பெருங்கடலில் உள்ள சலினா குரூஸ் துறைமுகத்திலிருந்து கோட்சாகோல்கோஸ் வரை 290 கிமீ தூரத்திற்கு இயங்கும் இந்த.இன்டர்ஓசியானிக் ரயில், 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரால் திறந்து வைக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |