இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 13 நிலநடுக்கங்கள்: வெடிச்சத்தம் கேட்டதாகக் கூறும் மக்கள்
இங்கிலாந்தில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்றால் வீடுகள் குலுங்கிய நிலையில், மக்கள் வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
ஒரே வாரத்தில் 13 நிலநடுக்கங்கள்
இங்கிலாந்தில், நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 வரையிலான ஒரே வாரத்தில் 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிரித்தானிய புவியியல் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு 11.23 மணியளவில், இங்கிலாந்திலுள்ள Silverdale என்னும் கிராமத்தை, ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
அக்கிராம மக்கள், தாங்கள் வெடிச்சத்தம் போல் ஒரு சத்தத்தைக் கேட்டு இரவில் விழித்துக்கொண்டதாகவும், தங்கள் வீடுகள் குலுங்கியதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
உண்மை என்னவென்றால், பிரித்தானியாவில் ஆண்டொன்றிற்கு 200 முதல் 300 நிலநடுக்கங்களை பிரித்தானிய புவியியல் ஆய்வமைப்பு பதிவு செய்கிறது. ஆனால், அவற்றில் 20 முதல் 30 நிலநடுக்கங்களை மட்டுமே மக்களால் உணரமுடிகிறது.
ரிக்டர் அளவில் மிகக் குறைவாக இருக்கும் மற்ற நில நடுக்கங்களை பதிவு செய்ய மிக நுண்ணிய நவீன கருவிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |