13 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி - ஜப்பானில் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்
ஜப்பானில் சுனாமி காரணமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
ஜப்பான் சுனாமி
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்பகுதியில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக அறியப்படுகிறது.
இதையடுத்து, ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் 12 அடி (4 மீட்டர்) உயரம் வரை சுனாமி தாக்கியது.
🚨 BREAKING: A massive M8.8 earthquake off Russia's Kamchatka has triggered powerful tsunami waves up to 5 meters. Coastal towns flooded. Japan, Hawaii, US West Coast on high alert. Evacuations underway. Aftershocks expected.#Russia #Earthquake #Philippines #TsunamiWarning… pic.twitter.com/NA344Ybrpy
— Kamal (@Kamal804_) July 30, 2025
கடலோர நகரங்களில், உள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஜப்பானின் ஹோக்கைடோ பகுதியில் தொடர்ந்து சுனாமி அலைகள் உயர்ந்து வருகிறது.
கரை ஒதுங்கும் திமிலங்கள்
இதனைத்தொடர்ந்து, சீனா, பிரிட்டிஷ் கொலம்பியா, அமெரிக்கா, ஹவாய் தீவு, அவுஸ்திரேலியா என பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள துறைமுகங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.
Due to the tsunami in Japan, four whales were washed ashore near the city of Tateyama in Chiba Prefecture in eastern Honshu Island, according to NHK. pic.twitter.com/3Nz4G2fPpQ
— Visegrád 24 (@visegrad24) July 30, 2025
மேலும், சிபாவில் உள்ள ஹிராசுனா கடற்கரையில் 4 திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |