கருங்கடலில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகள்: உக்ரைனிய துறைமுகத்தில் பதற்றம் அதிகரிப்பு
ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனிய துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர்.
சிக்கலில் 13 இந்திய மாலுமிகள்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான ட்ரோன் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சோர்னோமோர்ஸ்க்(Chornomorsk) துறைமுகத்திற்கு அருகில் ‘M.V. AMIR1’ என்ற சரக்கு கப்பல் சிக்கியுள்ளது.
சோர்னோமோர்ஸ்க் துறைமுகம் மற்றும் ‘M.V. AMIR1’ சரக்கு கப்பலை சுற்றியும் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

‘M.V. AMIR1’ சரக்கு கப்பலில் 15 மாலுமிகள் சிக்கியுள்ள நிலையில், அதில் 13 மாலுமிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இந்திய முன்னோடி மாலுமிகள் சங்கம்(FSUI) வெளியிட்ட தகவலில், கப்பலில் சிக்கியுள்ள மாலுமிகள் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி இருப்பதாக எச்சரித்துள்ளது.
சரக்கு கப்பல் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாலுமிகள் இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
வெளியான வீடியோ
ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ‘M.V. AMIR1’ சரக்கு கப்பல் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக கப்பலின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை FSUI வெளியிட்டுள்ளது.
Urgent Appeal | M.V. AMIR1
— FSUI (@FSUIINDIA) July 28, 2026
M.V. AMIR1, currently at Ukrainian port Chornomorsk with 15 crew on board, including 13 Indian seafarers, is trapped in a terrible and life-threatening situation.
Repeated drone and missile attacks are being attempted in the immediate vicinity of the… pic.twitter.com/tIIwuC9Mdk
அதில் கப்பலை சுற்றி மோதல்களினால் ஏற்பட்ட கரும்புகை மண்டலங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.
இருப்பினும், உக்ரைனிய துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் அல்லது கப்பல் நிறுவனங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |